“ஓம் நமசிவாய”
இறைவனருளுடன் 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை ஹெலன்ஸ்பெர்க் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில் 10வது வருடாந்த திருத்தொண்டர் விழா காலை 8:00 மணி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக “சித்தாந்த கலாநிதி” “செந்தமிழரசு” திரு கி. சிவகுமார் M.E. அவர்களது “திருத்தொண்டர்கள் மகிமை” எனும் உரையும் ஆலய நிர்வாகத்தினரின் “திராவிட வேதம் எனும் பஞ்சபுராணம்” என்ற நூல் வெளியீட்டு வைபவமும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.
இந்த நூலும் அணைத்து திருமுறை பண்களையும் கொண்டதாக 31 பஞ்ச புராண தொகுப்புகள், பண்களுக்கான இராகங்கள், சுரவரிசைகள், அட்டவணை, சிறப்பு விசேட விழாக்களுக்கான பன்னிரு திருமுறை பதிகங்கள், பாடல்கள், கொடிக்கவி, விநாயகர் அகவல், கந்தர் அநுபூதி, கந்தரலங்காரம், கந்தர் சஷ்டி கவசம், சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, அம்மை பதிகங்கள், சிவஞான போதம் மூலம், திருமுறைகளும் ஆசிரியர்களும், நாயன்மார்களும் குறித்த தகவல்கள் என பலவற்றை அடக்கியது.
அடியார்கள் இவ்விழாவில் பங்குபற்றி நூலினையும் தம்மால் இயன்ற நன்கொடையினை செலுத்தி பெற்று சிறப்பித்து பயன் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”